என்னிடம் பாடல் தயாரிப்பாளர் வராமைக்கான ஒரு காரணத்தை நேற்றுக் கூறியிருந்தேன் (பாட்டு எடுக்கத் தெரியாது என்ற சக படைப்பாளிகளின் வச*ந்தி)
இரண்டாவது அவர்கள் கொண்டு வரும் பாடலுக்கு நான் சம்மதிக்காமல் என்னிடம் உள்ள concept க்குத் தான் செய்வேன் என கூறுவது
ஆனால் இப்பாடலுக்கு பணம் போட்ட தனு தெளிவாகவே தான் அணுகினார். நான் இயக்க இருந்து தடைப்பட்டுப் போன „துலைக்கோ போறியள்“ முழுநீளப் படத்தின் opening song தான் இருக்கிறது ஆனால் ஒரு கெண்டிசன் படத்தின் கதைக்குத் தேவைப்படுவதால் படத்துக்கும் பயன்படுத்துவேன் என்றேன். தனு எந்த மறுப்புமின்றிச் சம்மதித்தார்.
4-5 வருடங்களுக்கு முன் திட்டமிட்டு வைத்திருந்த பாடலுக்கான காட்சியமைப்பைச் சொன்னேன். தனு அடுத்த நாளே 3 பல்லவி அனுப்பினார் அதில் ஒன்றைத் தெரிந்து ஒரு மாத கலந்துரையாடலுடன் தயாரான பாடலை சமீல் இசையமைக்க பாடல் ஒரு வருடத்துக்கு முதலே கையில் வந்து விட்டது.
தற்போது மற்றைய கலைஞர்களின் பெயர்கள் சுவரொட்டியில் உள்ளடக்கப்படவில்லை, பாடல் வெளியிடுவதற்கு முன் வரும் சுவரொட்டியில் மிகுதி விபரம் அறிவிக்கப்படும்.
வடிவமைப்புப் பணியில் சிரத்தை எடுத்த கதிருக்கும் நன்றிகள்.
விரைவில் உங்கள் பழைய நினைவுகளையிம் ஏற்றிச் செல்ல வருகிறது „தட்டிவான்“