உன்னை விரும்பிய உள்ளங்கள் ஏராளம் என்று தெரிந்திருந்தும் -என்
உள்ளத்தில் உன்னை வரித்தேனே
நாளெல்லாம் உன் வரவினைப் பார்த்து
நாளும் தவியாய் தவிச்சேனே- பத்தோடு பதினொன்றாய் போவேனோ -இல்லை இத்தோடு மனம்மாற்றிக் கொள்வேனோ …
நேரில் உன்னைப் பார்க்கவில்லை
நிழலில் கூட மிதிக்கவில்லை-உன்
பேரும் புகழும் அறிந்ததினால்
நானும் உன்னை நேசித்தேன்
உனைக் காணும் நாளை யாசித்தேன்
ஒருநாள் நீயும் வந்துவிட்டாய் -அது திருநாள் என்று நினைத்திருந்தேன் மறுநாள் நீயும் சென்றுவிட்டாய் -இனி வரும்நாள் எல்லாம் இன்பமென்று பலநாள் நானும் பார்த்திருந்தேன் ஓ! தூரத்துத் தண்ணீராய் போனேன் நான் -ஆபத்துக் குதவிட மாட்டேன் நான் ….
ஓ -ராசா நீயோ நல்லவன்தான்
உன் உள்ளம் இனிமை கொண்டதுதான்
ஓ -ஆசா பாசம் கொள்வதில்தான் ஒரு தெளிவும் புரிதலும் இருந்திடனும் அறிவுடன் ஆய்வு செய்திடணும்…
„உறுதி உறுதி உறுதி உறுதிக் கோர் உடைவுண்டாயின் இறுதி இறுதி இறுதி“ என்றான் பாரதி.
குக்கூவென்று குயில் பாடும் பாட்டிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே அந்தப் பொருளை அவனிக்குரைத்திடுவேன்
விந்தைக் குரலுக்கு மேதினியீர் என்செய்கேன்“
என்று சொல்கிறான் பாரதி
ஆ..பாரதியின் கூற்றுப்படியே உறுதி இழந்தபின் நான்
என் மனத்தை இறுதியாகக் கேட்டு மாற்றிக் கொண்டேன் .
நல்வாழ்வு கிடைத்தது..நானும் மகிழ்வுடன் வாழுகின்றேன் .
ஓ..ராசா நீ காய்த்தமரம்
கல்லெறி பட்டுக்கொண்டே இருந்தாய்..
காலன் உன்னை நெருங்கிய போதும் அவனை
காலால் உதைத்துத் தள்ளி விட்டாய்..
எல்லோரையும் நீ நேசித்ததால்
அவர்களின் வேண்டுதல் உனக்கு பலித்தது.
வாழுங்கள் பேரோடும் புகழோடும் வாழுங்கள்
எங்கோ ஒரு மூலையில் என் இதயமும் உனக்காக இரங்கும்.