உடலிலே உயிர் எங்கே இருக்கிறது
உயிர் போனதும் உடல்மட்டும் மிஞ்சுகிறது
அதுவும் மண்ணோடு கலக்கின்றது
அல்லது தீயோடு கலந்து
சாம்பலாய் மண்ணோடுகலக்கின்றது
நாம் வந்ததும் தெரியாது
போவதும் எங்கே தெரியாது
மண்ணிலே வந்து சொந்தங்களை
உறவுகளை நட்ப்புக்களை
தேடியபின்பு போவதுதான்
வாழ்க்கையாகும்
ஆனால் இயற்க்கையோ
இறைசக்தியோ ஒன்று
எம்மை படைத்து வழிநடாத்தி
வழி அனுப்புகின்றது
என்று புரிகின்றது
பூமியிலே என்னைப்படைத்து
கலையோடு இணைத்து
கவிபாடவைத்த இறைவா
உனக்கு கோடிநன்றி
உன்னைப்பாடும்போது
ஆலயங்களில் நிற்க்கும்போது
மனம் ஆனந்தம் கொள்கிறது
அமைதி காண்கின்றது
எனக்கு வரும் துன்பதுயரங்கள்
இறைவா நீயே பார்ப்பாய்
என்ற அசையாதநம்பிக்கை
எனக்குள் ஆழமானது
வரும் வெற்றிகள் நீயே தருவது
என்பது எனது திடமான நம்பிக்கை
இறக்கும்வரை நம்பிக்கையோடு
இறைவனைப்பாடுவதே என்பணியாகும்
மங்காதகுரலும் அழியாதகலையும்
பணிவானகுணமும் அன்பானவாழ்வும் எனக்குத்தருவாய் இறைவா
உன்பாதம் பணிகின்றேன்
(மயிலையூர்இந்திரன்)