தொட்டுணர்ந்து தாலியிட்டுத்
தாரமாக்கி உன்னை._இன்று
தரணிபோற்றும் நல்ல
தம்பதியானோம் பெண்ணே
*
நொட்டைநொடிசல் சொல்வது
நாளும் மாமியார்கள் கலை,
நோகடிப்பதென்பது பொதுவாகவே நாலுறவுகளின் வேலை .இது மரபுதானே.
*
பட்டுத் தெளிவதில்த்தானே
பரம சுகம் உள்ளது என்னவளே.
பாராமுகமாக இருக்க நீயும்
பழகிக்கொள் கண்ணே !!
*
தொட்டதுக்கெல்லாம் சினந்துமே
தொட்டில் குழந்தை போல நீயும்
தேம்பியது ,அப்பா அம்மாவைத்
தேடியோடுவது சிறுப்பிள்ளைத்தனமே
*
விட்டகல மாட்டாத உறவொன்று விதிவசமாகியது ,என்றெண்ணியே
விரும்பி வேண்டி உன்னை என்
வீட்டோடு இணைத்துக்கொண்டேன்.
*
நட்டமோ நயமோ எனக்கு நீதானடி,
நானெப்போதும் உனக்கேதானடி,
நல்லுறவுகள் இல்லாத வாழ்வ்வானது
நல்ல தாம்பத்தியம் ஆகாது கண்ணே.
..
தாரநேசன்