எதிர்ப்பின் மூலோபாயங்களில் மொழி என்ன பாத்திரத்தை வகிக்கிறது? பேர்லினில் நடைபெறும் கருத்தரங்கு!!

தமிழ் March 20, 20190

ஓரங்கட்டப்படும் மற்றும் அழிக்கப்படும்
மொழிகளை பாதுகாக்க  நாம் என்ன செய்கின்றோம்?

எமது சொந்த மொழியை  பயன்பாட்டில்  வைத்திருப்பதும் மற்றும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்கு பரிமாற்றம் செய்வதும்  எந்த அளவிற்கு ஒரு எதிர்ப்பாக அல்லது பாதுகாப்பாக  கருத முடியும்?

எமது மொழி எம்மை அடையாளப்படுத்த எவ்விதமாக அர்த்தப்படுகின்றது?

நாளைய தினம் ( ‪21.03.2019‬ ) மாலை 7 மணிக்கு   குறிப்பாக ரோமானிய மொழி மற்றும் தமிழ் (ஈழம் தமிழ்) மொழிகள் தொடர்பாக இக் கருத்தரங்கு நடைபெறுகின்றது. இரு மொழிகளும் இன்றும் வலுவாக ஓரங்கட்டப்பட்டு, அதேபோல் அவைகளுக்கு களங்கம் விளைவிக்கப்படுகின்றது.

இக் கருத்தரங்கில் எமது தமிழாலய ஆசிரியை திருமதி காருண்யா விஎக்சோரெக் அவர்கள்  பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார்.

„தமிழாலயத்தில் நான்  தமிழை கற்றதோடு  மட்டும் அல்ல, அங்கே அடுத்த தலைமுறைக்கும்  தமிழை  கற்பிப்பது   , எனது தாய்மொழியை அழிவில் இருந்து தக்க வைக்கவும், பாதுகாக்கவும் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும்  செய்யும் போராட்டமாகவே பார்க்கின்றேன்.“காருண்யா விஎக்சோரெக் (கருணாகரமூர்த்தி )

பேர்லின் தமிழாலயத்தின் 2018 ம் ஆண்டின் தமிழர் திருநாள் விழாவில் காருண்யா விஎக்சோரெக் அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

காருண்யா விஎக்சோரெக், MA (IEP Paris), MSc (LSE) அவர்கள்  பேர்லினில்  (FU), பாரிஸ்  மற்றும் லண்டன் (LSE) ஆகிய  நகரங்களில் பிரான்சு-ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஆய்வுகளில் முதுகலை பட்டதாரியாக திகழ்வதோடு மேலும் தமிழில் மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றில் டிப்ளமோ  பெற்றார். காருண்யா விஎக்சோரெக் அவர்கள்  பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தில் ஆசிரியையாக சேவை ஆற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு நடைபெறும் முகவரி :
xart splitta
Hasenheide 73, 10967 Berlin
காலம் : 21.03.2019
நேரம் : மாலை 7 மணி

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்:

Sprache(n) des Widerstands RPM 2019
Öffentlich · Gastgeber: RomaniPhen und xart splitta

தொடர்புகளுக்கு/ மேலதிக தகவல்:
https://www.xartsplitta.net/kontakten/

அனைவரையும் குறிப்பாக இளையோர்களை கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம் .

தமிழாலயம் பேர்லின்
நிர்வாகம்