எஸ்.ரி.எஸ் கலையகம் இவர் வரவால் பெருமையடைகிறது
ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்கும் மகிழ்வைத் தரக்கூடியதாகும் அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் இருந்து யேர்மனி வந்து யேர்மனியில் நடைபெற இருந்த கலை நிழ்வுக்கு நண்பன் மணிக்குரல் தந்தமுல்லைமோகன் அவர்களை அறிவுப்புத்துறைக்கு அவர் சம்மதம் பெற டோட்மூண்ட் நகருக்கு வந்திருந்தபோது
நண்பன் முல்லைமோகன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவைப்பற்றிக் கூறவே தான் அவரை சந்திக்க ஆசைப்படுவதாகா டேவிற் அவர்கள் மணிக்குரல் தந்தமுல்லைமோகன் கூற அவர் எஸ்.ரி.எஸ் கலையத்துக்கு அழைத்துவந்த போது எடுக்கப்பட் நிழல்படம் தான் இது திரு அன்ரன் டேவிற் அவர்களைக் கண்டதும் தேவராசா அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததை எம்மால்உணரக்கூடியதாக இருந்தது காரணம் ஓர் முதிர்ந்த கலைஞன் ஓர் மாபெரும் கலைஞர் எஸ்.ரி.எஸ் கலையகத்தில் இருவரும் தங்கள் கலைஅனுபவங்களை பரிமாறி தங்கள் பாடல்களை ஒலிப்பேளையில் கேட்டார்கள் இருவரும் ஒருவரை ஒருவர்பாராட்டினார்கள் பின் இறுதியாக இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவை அவர் திறமைகளை அவர் ஆற்றலை எல்லாம் பாராட்டினார் மூத்த கலைஞன் அன்ரன்-டேவிற்
இத்தனை சிறப்பான சந்திப்புக்கு பாலத்தையும் இணைத்த அந்த நல்ல உள்ளம் கொண்ட ஊடகப்பிரியன் மணிக்குரல் தந்தமுல்லைமோகன் கலைஞர்கள் இணைப்பு பணிக்கு நன்றி சிறுப்பிட்டி இணையம் சுவிஸ் விமல்