அனேக
அடுக்களைகள்
களையிழந்து
வாரமொன்றாச்சு..
கொரோணாவின்
வருகையால்
மனங்களில் மரண
பயம் நீளுது.
பொருளாதார சுமையால்
பாரமேறியாச்சு..
ஈரமுள்ள
இதயங்களின்
இருப்பும் கேள்வி
குறியாச்சு.
நாடெல்லாம்
ஊரடங்கு சட்டம்
பரவலாச்சு..
தெருக்கள்
வெறிச்சோடி
கடைகளில் அடுக்கியிருந்த
அலுமாரிகள்
காலியாச்சு.
பதுக்கி வைச்சவன்
பண்டமெல்லாம்
காலவதியாச்சு…
ஊரையும்
வேரையும் எண்ணி
இயங்கியவர்
இதயம் நொந்து
அழுகின்றார்.
உதவும் கரங்கள்
உலர்ந்து போயாச்சு..
அழிவின்
உச்சத்தில்
மனித உயிர்களின்
அந்திம நகர்வு
ஆரம்பமாச்சு.
சகித்துக் கொண்டு
வாழ்வதல்ல வாழ்க்கை.
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை
என்றால் எங்ஙனம்
அது சாத்தியமாகும்.?
ஆக்கம் கவிஞர் ரி .தயாநிதி