எங்க ஊர்த்திருவிழா
எட்டுத்திசையும் ஒலிக்கும்பெருவிழா
உள்ளம்முழுக்க சந்தோசமுங்க
பள்ளியெல்லாம் விடுமுறையுங்க..
எங்க ஊர் ஆத்தாவை
சந்தனத்தில் அலங்காரம் செய்து
மேள தாளம் ஊரெல்லாம் ஒலிக்க
சொந்த பந்தம் பங்காளி ஒன்றுகூடி
ஆத்தாவின் அருள் வேண்டி
அன்னக்காவடியும் எடுத்திடுவோமே..
பால்குடம் தலையில் சுமந்து
ஆத்தாவோடு வீதி வலம் வரும்
நாம்மவூர் பெண்கள் எல்லாம்
வேண்டும் பலன் தந்தருள்வாள்
எங்க ஊர் அம்மனும் தானே
சூரியன் சுட்டெரிக்க
சுத்திவரும் தாவணி போட்டபெண்கள்
கண்ணுக்கழகாய் கைநிறைய வளையலுமாய்
கால் கொலுசு சிணுங்கிடவே
உள்ளம் அள்ளிப் போகுதிங்க
மாமன் மனசு தவிக்குதிங்க…
கூத்தும் கும்மாளமுமாய்
பஞ்சுமுட்டாய்
கையிலேந்தி
பவனிவரும் நம்மவூர்
குழந்தைகளும்…
எங்க ஊர்த் திருவிழாங்க
இன்பம் பொங்கும் பெருவிழாங்க
இதயமெங்கும் நிறை விழா தானுங்க..