எங்கே எங்கள் சுதந்திரம்….

ஆங்காங்கே குண்டுகள் 
அதிரடியாய் வெடிக்க 
ஆட்சியில் அத்தனை பேரும்
எனக்கொன்றும் தெரியாதென்று நடிக்க 
வித்தை காட்டினவன் 
வெற்றியை 
சுதந்திரமாய் 
அள்ளிக்கொண்டு போக 
அப்பாவி மக்கள் 
அநியாயமாய் சாக 
ஆட்சியின் நாயகர்
மொத்தமாய் பழியினை
மறுபக்கம் சுமத்தி 
ஊரூராய் உடுக்கடித்து 
அடுப்படிகள் மோந்து பார்க்க
அதிரடிப் படையினை அழுத்தி 
ரோந்து போக ஒரு 
அவசர கால சட்டம் 
காய்ந்து கருகும் 
மக்கள் கூட்டம் 
மறுபடியும் அடிவளவில் 
அவனவன் நடமாட்டம் 
அடையாள அட்டை 
அது தொலைந்தால் 
அவனவனுக்கு அடிவயிற்றில் 
பயத்தின் சேட்டை…

சிறுபான்மையாய் நாங்கள் 
எல்லாத்தையும்
கோட்டை விட்டோம்
சில்லறைகளிடம் 
இனிமேல் நாங்கள் 
கையேந்த மாட்டோம்

இனியென்ன சனியன்தான் 
இனியொரு சுற்று 
இடிவிழும் 
இராணுவத்து 
இம்சையின் ஆட்டம் 
தொடரத்தான் போகிறது 
அடிமேல் அடி வாங்கும் 
தண்ணியில்லாக் காட்டில்
தமிழர் கூட்டம் 
எங்கே எங்கள் சுதந்திரம்….

அருள் நிலா வாசன்