எம்மவர்களுக்காக
எங்கள் குழந்தைகள் இசைக்கும் இசை அமுதம்
தோல் இசை கருவி
அரங்கை அதிரவைக்க
நரம்பிசை கருவி
மேனியெங்கும் மெய்சிலிர்க்க
நாதேஸ்வர கருவி
எமது பண்பாட்டு இசையை எடுத்துரைக்க
மண்டபங்கள்
எங்கும் எதிலும் இளையோர்களின் ஆற்றல்
ஏங்கி ஒலிக்க.
புலமும் களமும்
கண்ணீரும் புன்னகையுமாக ஆனந்தத்தில் மூழ்கி
கண்ணீரை
துடைக்கட்டும்.
புன்னகை
கொடுக்க பல கரங்கள் இங்கு கூடட்டும்.
அவையங்கள்
இழந்தல் என்ன
அங்கங்கள்
பிளந்தால் என்ன
தன்னம்பிக்கையை
இழக்காது வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு
தைரியமாக
நின்று
புதிய ஒரு தலைமுறை
செய்தி ஒன்றை சொல்லுகின்றது
தானாடாவிடினும்
தன் தசையாடும் என்பதை.
வீழ்வது
நாமாக இருந்தாலும்
வாழ்வது
தமிழும் தமிழ்மான உணர்வுகளுமாக இருத்தல்வேண்டும்.
வாருங்கள்
ஒன்றாய் சேருங்கள் 16-03-2019
உங்களுக்காக
வாழ்ந்தவர்களுக்காக
நீங்கள்
வந்து எழுந்து நின்று வாழ்த்த வாருங்கள் 16-03-2019
பாருங்கள்
புலத்தின் ஆற்றலையும்
களத்தின்
அர்ப்பணிப்பையும் 16-03-2019.