இலங்கை வானொலி, மற்றும் ரூபவாகினி பிரபல செய்தி வாசிப்பாளரும்,இ.ஒ.கூ.முன்னனாள் பணிப்பாளருமான V.N.மதிஅழகன் அவர்கள் 17.11.2020 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்
www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
கிழ் K.P. லோகதாசின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது
இலங்கை வானொலி, மற்றும் ரூபவாகினி பிரபல செய்தி வாசிப்பாளரும்,இ.ஒ.கூ.முன்னனாள் பணிப்பாளருமான V.N.மதிஅழகன் அவர்களு-க்கு 17.11.19 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இறையாசியுடன் கூடிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை 17.11.19) பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறேன்.வாழ்க வளமுடன் பல்லாண்டு.
வி.என்.மதிஅழகன் அவர்கள் 1971இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக இணைந்து பல்வேறு பதவிகளை வகித்த பின்னர் தமிழ்ச்சேவைப் பணிப்பாளராக விளங்கி அதன் தரத்தை உயர்த்த உழைத்தவர்.
2000 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக உயர்ந்தவர்.மூன்று தசாப்தங்களாக ஒலிபரப்பின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர்.(தொடர்ந்து பதித்துக்கொண்டிருப்பவர்)கலை இலக்கியத் துறைகளில் அவருக்கிருந்த ஆர்வமும் தமிழை தெளிவாகவும் அழகாகவும் பேசும் தனித்துவமான ஆற்றலும் அவரை ஒலி, ஒளிபரப்புத்துறைகளிலே புகழீட்ட வைத்தன.
பாரம்பரிய சிறப்புக்களைப் பேணுவதில் சிரத்தை கொண்ட ஆற்றல் மிகு ஒலிபரப்புக் கலைஞரான மதிஅழகன் அவர்களுக்கு எமது நாட்டின் நாட்டார் பாடல்களையும்,பழைய கூத்து, நாடகப்பாடல்களையும் அங்கீகரித்துப் பிரசித்தப்படுத்தியதிலும் ஆவணப்படுத்தியதிலும் குறிப்பிடத்தக்க பங்குண்டு.
வி.என்.மதிஅழகன் அவர்கள் நந்தாப் புகழ்பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து“
சொல்லும் செய்திகள் „என்ற இருநூல்களையும் எழுதியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் செய்திகள் வாசிப்பவர் வி.என்.மதிஅழகன்
என்று ஆரம்பித்தவர் உலகத்தமிழ் மனங்களில் வசிக்கிறார் என்றால் மிகையாககாது.
அவரின் செய்தி வாசிக்கும் அழகே தனியழகு அவரது தேன்கலந்த மென்குரலில் அழகிய தமிழ் உச்சரிப்பு ஏற்ற இறக்கம், ஒரு சங்கீதம் கேட்கின்ற உணர்வைத்தரும்.செய்தியை கேட்பதில் ஆர்வம் கொள்ளாதவரும் இவரது வாசிப்பின் ஸ்ரைலில் மெய்மறந்து செய்தியை கேட்க ஆர்வம் கொள்வார்கள் என்பது பலரது கருத்து. அதேவேளை இளையவர்கள் பலர் இவரை பின்பற்றியே ஊடகங்களில் மிளிர்கிறார்கள் என்பது என்னொரு தரப்பின் கருத்து.
1971 இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்
1979 சுயாதீனத் தொலைக்காட்சி
1982 இல் ரூபவாகினி (இலங்கை)
2001 ரி.வி.ஐ.தொலைக்காட்சி (கனடா)
என்று அவர் சேவை தொடர்கிறது.
புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் திரு.வி.என்.மதிஅழகன் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து பணி ஆற்ற பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து இறையாசியுடன் கூடிய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
„உலகெங்கும் நமது மண்ணின் மணம்கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்டும் „(K.P.L