உறவு உயிருக்குச் சமம்!“ வாணமதி.

ஒவ்வொரு உயிருக்குமான உயிர்ப்பு எப்படி வேறுபட்டதோ அவ்வாறே ஒவ்வொருவரின் குறிக்கோளும் மாறுபட்டது.

பத்துப்பேர் ஒரே பாதையில் ஓடுகையில் இருவர் மாறுபட்ட பாதையில் ஒடுகின்றனர்.இந்த இருவரைப் பார்க்கும்,பேசும் பார்வையாளர்களே
அதிகமாக இருப்பார்கள்.

இங்கு விமர்சனங்களும்
வேறுபட்டதாகவேஇருக்கும்.

ஆனாலும் எதிர்மறைவான விமர்சனங்களே அதிகமாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.!

அந்த இருவரைப்போல நாளுக்கு நாள் மாறுபட்ட பாதையில்ஓடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கையில் நாளடைவில் அதுவொரு உற்றுநோக்கும் விடையமாக மாறிவிடுகிறது.அதுவே பதிவாகி ,வரலாறும் ஆகிவிடலாம்.

இப்போது நானும் மாறுபட்ட பாதையில் ஓடும் பெண்.

பல்வேறுபட்ட கருத்துக்களால் காயப்படுத்தும் இதயங்களே அதிகம்.

வாழ்க்கையென்பதை பெண்ணுக்குள் உணர்வோடு மட்டும் புகுத்திவிட முனைகின்றனர் பலர்.சிறுவயது முதல் உணர்வோடும் ,அறிவோடும் எப்படி வாழவேண்டுமென கற்றுக்கொண்டவள் நான்.

எனக்கான குரு நூல்கள் மட்டுமே!

கண்விழித்து விடிய விடிய வாசித்தபோது கரப்பாண் பூச்சியின் உரையாடலும்,எலிகளின் திட்டமிடலும் வியக்கவைத்தது.

பகல் பொழுதில் உணர்வில் ஒன்றித்து இராப்பொழுதில் உழைக்க விழைகையில் அறிவோடு செயல்பட்டன.

நம்மில் பலர் பெண்களை உணர்வோடு மட்டுமே வாழவேண்டுமென சாடுகின்றபோது சொல்லும் வார்த்தை „நல்ல கணவன்,குழந்தைகள் இதற்கு மேல் என்ன வேண்டும்?“

ஏன் வேண்டாம்?

என் வாழ்வு வேண்டும்!
எந்தன் அடையாளம் வேண்டும்!
எனக்கான கனவு வேண்டும்!
எனக்கான ஒற்றையறை வேண்டும்!
ஒழித்த சாவி எனக்கு மட்டுமே தெரிய வேண்டும்!
அறிவோடு தொழில் வேண்டும்!
தொழிலில் ஆணோடு ஈடாக உயர வேண்டும்!
ஆணை மறக்கும் பெண்ணாக வேண்டும்!
அறிவை மதிக்கும் உறவாக ஆண்வேண்டும்!

இத்தனையும் வேண்டும் போது அறிவோடு சிந்தித்து உணர்வோடு ஒன்றித்து பலமாக மதிக்கும் ஆணைப்போல பெண்ணாக இவள் மாறுவாள்.

இவள் பாதையும் உற்றுநோக்கப்படும்.
ஏனெனில் ஆணுக்கு நிகரான பெண் என்பதால்.

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பெண்களின் பன்முகப்பட்ட வளர்ச்சியை பெண்களே ஏற்றுக்கொள்வதில்லையென்பதே வருத்தமான செய்தி.

எனது இரண்டாவது நூல் தற்போது பிரசவத்துக்காக அச்சகத்தில்.நூலின் தாயாக நான் தவித்திருக்க நலன் விரும்பிகள் (?) நா புரட்டிப் புரட்டிப் பேசுகின்றனர் இதை இவள் தான் எழுதினாளா?

ஒன்று மட்டுமே புரிந்தது!
வேறுபட்ட பாதையில் ஓடுகிறேன்.ஆனாலும் சில கழுதைகளோடு நட்பாகிய போதும் குதிரை என்பதை மறைத்தது என் தப்பென்று.?

எனது நூலுக்கான வாழ்த்தினை உளமார பகிர்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள் பற்பல.??

24.7.17 முதல் இந்தியாவில்….

„அறிவோடு ஆராய்ந்து உணர்வோடு ஒன்றிக்கும் உறவு உயிருக்குச் சமம்!“
-வாணமதி.

Merken

Merken