இரு குடம் தாங்கும் ஏந்தலையே
உன் ஒரு குடம் தாங்க ஏந்தனையே.
மறு புறம் வா என் மாந்தளையே
உனை மனை புறம் தாங்கிறேன் என் மாங்கனியே..
இடரும் பக்கம் உன் துணை நான் நானே..
இதயம் வலம் வலம் வரும் தன்னால் தானே..
இன்பம் துன்பம் உன் வசம் மானே..
இயற்கை என்பது பெண் வசம் தானே….
கலகம் செய்யும் கவிதை பெண்ணில் கண்ணில்
கவிதை சொல்லும் எல்லாம் மண்ணில்
காதல் இல்லை என்றால் பெண்ணே உன்னில்
கவலை கொள்ளும் இந்த உலகே உண்மை..
மேகம் கூட வானில் மறையும்
மோகம் இல்லாத உடலும் உறையும்
தீயில் இட்டால் எல்லாம் எரியும்
தேகம் தீண்டாத உயிரும் உடலில் கரையும்
பாவம் என்றால் பாதை மாறும் உலகில்
பாகம் மாறிச் சென்றால் சேதமாகும் உடலில்
நோவைத் தந்து போவதென்பது பெண்மை எளிமை
நோய் நொடியின்றி வாழ்வது உலகில் கொடுமை..
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்