அல்லா சொன்னாரா ஜேசு சொன்னாரா
அன்பு கருணை என்று வாழ்ந்த புத்தர் சொன்னாரா
அந்த ஆதி சிவன் அருகில் வந்து அழுத்தி சொன்னாரா
மாறுங்கடா நீங்க மதம் மாறுங்கடா -இல்லை
மாற்றுங்கடா மதத்தை மாற்றுங்கடா -என்று
சொன்னாரா கடவுள் வந்து சொன்னாரா
எம்மதமும் சம்மதம் என்று சொன்னார்கள்
ஒன்றேதான் குலம் ஒருவனேதான் தேவன்
என்றே சொன்னார்கள் நன்றே சொன்னார்கள்
மதம் என்ற ஒன்று உலகில் தோன்றவில்லையே
மதம் பிடித்து தெருவில் நீங்க அலைவதேனடா
அவரவர் விருப்பப்படி விட்டு விடுங்கடா -எந்த
ஆண்டவரும் மதம் மாற்ற சொல்லவில்லைடா
கூலிக்கு மாரடிக்கும் கொள்கை ஏனடா -சொந்த
சோலி குடும்பம் என்று இருக்குதல்லடா- இந்த
மதம் மாற்றும் சோலி என்ன மண்ணாங்கட்டிடா
எந்தக் கடவுள் எதிரில் வந்து நின்றதுண்டுடா
சொந்தப் புத்தி கொண்டு நீ நினைத்து பாரடா
மந்தப் புத்தியாலே மதவெறியை மனதில் கொண்டு
நிந்தனைகள் செய்யும் உன்னை திருத்த யாருடா
நற்சிந்தனைகள் இருந்தால் நீ திருந்தி வாழுடா