உதவும் உள்ளங்களுக்கு ஊர் நேசனது உடன்பாடில்லாத உபதேசம் .கவிதை ஊர் நேசன்

ஊரையும்
உறவையும்
உயர்த்தவெண்ணும்
உன்னது
உன்னதபண்பை
உதறி நீயும்
உடப்பிலிடு
உறவே !!!
உடலாலும்
உள்ளத்தாலும்
உதவும்
உனது ,
உதவிமுடிந்ததும்
உபகாரமாக
உன்னையே
உதாசிக்கும்
உருப்படாத
உலகத்தால்
உன் மனதை
ஊனமாக்காதே !!!
உதவிக்காக
உருகி
உளறும்
உப்பில்லாத
உணர்ச்சிவச
உறுதிமொழிகள்
உயிர்க்காயம் தரும்
ஊமைவார்த்தைகளே !!!
ஆக்கம்  ஊர் நேசன்