உண்மையாய் இரு.


இது வரை
வாழ்ந்த கூடு
புனிதமான
கருவறை…
ஔியின்றி
ஒழித்திருந்தாலும்
உருவாகும்
வரை தனித்திருந்தாய்..
கூட்டல் கழித்தல்
பெருக்கல் பிரித்தல்
கணக்குகளோடு
பின்னியதால் வாழ்க்கையும்
ஒரு கணக்கு..
பந்தங்கள்
சொந்தங்கள்
எனும் முற்றுகைக்குள்
சுற்றி வளைக்கப்படுவாய்..
வெளி வெளிச்சத்தில்
திரு(ட்டு)முகங்கள்
பலவற்றை நித்தம்
நீ தரிசிப்பாய்..
தாயைப் போற்று
தந்தையை போற்று
தாய் நிலத்தை போற்று
தமிழையும் போற்று..
ஆற்றல்களை
அறுவடையாக்கு.
அடுத்தவர்க்கும்
அள்ளித் தெளி..
செருக்கினை
விரட்டி கிடைத்த
வாழ்வுக்குள்
இனிமையை திரட்டு…
காலங்களை
உன் வசப்படுத்து
கடமைகளை
அட்டவணைப்படுத்து..
உலகம்
உருண்டை
உன்னையும்
உருட்டும்.
உண்மையாய் இரு

ஆக்கம் கவிஞர் ரி தயாநிதி