கடந்த 14.09.2019 ( சனிக்கிழமை) யேர்மன் கேர்ப்பன் மாநகரில் சகோதரியின் நட்டுவாங்கத்தில் சகோதரனின் பரதநாட்டிய அரங்கேற்றம். கேர்ப்பன் இராஜேஸ் நர்த்தனாலய அதிபரும் “ பரதசூடாமணி “ „இளம்கலைமாணி“ ஸ்ரீமதி. ஜெகதீஸ்வரன் துஸ்யந்தி அவர்களின் மாணவனும், மகனுமாகிய „நாட்டியகலாஜோதி“ செல்வன். ஜெகதீஸ்வரன் மனோச் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த இசைப்பிரியர்களுடன் நிறைவாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரான்ஸ் „பரதசூடாமணி“ஸ்ரீமான்.துரைராஜசிங்கம் தயாளசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக „கவிமாமணி “ கி.த.குகதாஸ் அவர்களும், கௌரவ விருந்தினராக இலண்டன் திரு.இரட்ணசுவாமி ஸ்ரீதரன் ( Ofal German coordinator) அவர்களும் விருந்தினராக கலந்துகொண்டார்கள். பி.ப 3.30 மணியளவில் மங்கலவிளக்கேற்றலுடன், சலங்கை பூஜை ஆரம்பமானது. தொடர்ந்து மாத,பிதா,குரு ஆசியுடன். குருவாக தாயின் கையினால் சலங்கை அணிவித்து. புஸ்பாஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. ஒரு ஆண்மகனாக தாயை குருவாக கொண்டு 12 ஆண்டுகள் தான் கற்ற கலையின் அறுவடையை அரங்கேற்றமாக மிளிர செய்தவர். „கலாஜோதி“ செல்வன்.ஜெகதீஸ்வரன் மனோச் என்பது பாராட்டி மகிழவேண்டிய நிகழ்வே.
நிகழ்வின் பக்கவாத்திய கலைஞர்களாக நட்டுவாங்கம் „நாட்டியகலாவித்தகர்“ செல்வி. டிஜானி ஜெகதீஸ்வரன், „நாட்டியகலாவித்தகர்“ செல்வி.நிறோசி லக்விண்டர் சிங், பாட்டு „மதுரக்குரலோன் “ ஸ்ரீமான்.எஸ்.கண்ணன், அவருடன் இணைந்து புதல்வன் செல்வன். கண்ணன் கௌதம், மிருதங்கம் „சங்கீதரத்தினம்“ ஸ்ரீமான். எஸ்.பிரணவநாதன், „மிருதங்ககலாஜோதி“ திரு.பிரணவநாதன் பிரசாந், வயலின் திரு. ஜெகசோதி நிருஜன், மோர்சிங் செல்வன். வைரவநாதன் விதுசன், மென்முழவு செல்வன். அனுசன் பாபு. ஆகியோரின் இனியநாத சங்கமத்துடன் இனிதாக அமைந்தது பரதநாட்டிய அரங்கேற்றம்.
தொடர்ந்து கௌரவவிருந்தினர் உரை, சிறப்புவிருந்தினர் உரை, விழா நாயகன், ஆசிரியர் , இளம் நட்டுவாங்க ஆசிரியர்கள் கௌரவிப்பினை மூத்த கலை ஆசிரியர்கள் வழங்கினார்கள். நிகழ்விற்கு மண்டபம் நிறைந்த கலையார்வலர்கள் , யேர்மன் வாழ் நடன ஆசிரியர்கள், சங்கீத ஆசிரியர்கள் பலரும்வருகை தந்தமை பாராட்ட வேண்டிய விடயமே. நிகழ்வினை தொகுத்து செல்வன். சொக்கலிங்கம் துஸ்யந்தன் அவர்களும் „நாட்டியகலாஜோதி“செல்வி. வேதிகா ஜெகதீசன் அவர்களும் வழங்கினார்கள்.
பத்திரிகை செய்திக்காக….
கி.த.தர்மாமகன்..