தமிழ் எம் டிவி தொலைக்காட்சி இயக்குனர் தமிழ்மணி சிவநேசன் அவர்களுக்கு இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் M A M தொழில்நுட்பகல்லூரியிலும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம்மாநாட்டிலும் தமிழ் நாடு அரசு பள்ளிகல்லூரியிலும் கிடைத்த பட்டங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வாழ்நாளில் மறக்கமுடியாத கௌரவிப்பு இந்தியமண்ணில் பேராசிரியர்கள் கரங்களினால் பெற்றது. மேலும் தமிழ் எம் டிவி தொலைக்காட்சியின் 30வது ஆண்டு விழா வெகு சிறப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிரபுதாஸ் அவர்களின் பெரும் ஒத்துழைப்புடன் முதலாவது நிகழ்வாக நடைபெற்றது . இங்கே 14 பேராசிரியர்களையும் 25 மாணவர்களையும் தமிழ் எம் டிவி தொலைக்காட்சி இயக்குனர் சிவநேசன் அவர்களினால் பொன்னாடை அணிவித்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்
30ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் தமிழ்மணி சிவநேசன் தமிழ் பணி கலைப்பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் .
.இரண்டாவது நிகழ்வாக M A M தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியர் இரஞ்சினி அவர்களின் ஒத்துழைப்புடன் ஐந்து பேராசிரியர்கள் 25 மாணவர்களுக்கு தமிழ் எம் டிவி தொலைக்காட்சி இயக்குனர் சிவநேசன் அவர்களால் பொன்னாடை அணிவித்து மாணவர்களுக்கு சான்றிதழ் வெற்றி கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை சிறப்பான விடயமாகும். இது யேர்மனி வாழ்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும் . யேர்மனியில் இருந்து இந்தியா சென்று அங்கு ஒரு பெருவிழா செய்வது என்பது இலகுவான விடயம் அல்ல. எனவே இவ்விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும். நிகழ்ச்சியில் என்னோடு இணைந்து சான்றிதழ்கள் வழங்கிய ஊடகவியலாளர் முல்லை மோகன் தமிழ் கல்விச் சேவை நிறுவனர் சிறிஜீவகன் அவர்களுக்கும் நன்றிகள் கூறி நிற்கின்றாரர் தமிழ் எம் டிவி தொலைக்காட்சி இயக்குனர் தமிழ்மணி சிவநேசன் .