வாழ்க வளம் என்பது
இவரது தாரக மந்திரம்.…
நாடகம் என்பது மூச்சு.
கலைஅரசு செர்ணலிங்கம் ஐயாவின்
முதல் மாணவன். இன்றும் தன்னை
மாணவன் என சொல்வது இவரின் பண்பு…
இவர் காலத்தில் நாமும் என்பது
எமக்கான பெருமை..எனது தேடிவந்த தேசம்.
பொய்முகங்கள் எனும் நாடகங்களில்
நடித்து எனக்கு பெருமை சேர்த்தவர்.
நாலு தலைமுறைக் கலைஞர்களோடு
பணியாற்றிய ஆசானாவார்..
ஈழத்திரை உலகில் கடமையின் எல்லை.
நிர்மலா.தெய்வம் தந்த வீடு எனும்
திரைப்படங்களின் கதாநாயகன்.தயாரிப்பாளன்.கண் முன்னே
கலைக்காக தன்னை அர்ப்ணம் செய்த மேதையாவார்..மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன்.
சிறந்த உதை பந்தாட்ட வீரனுமாவார்.
தள்ளாத வயதிலும் வயதைச் சொன்னால்
பொல்லாத கோபத்தின் சொந்தக்காரனாகிவிடுவார்..
இன்றும் தன்னை இளையனாகவே
எண்ணிக் குதூகலித்துக் கொள்ளும்
முன்னோடியாவார்.இவர்கள் எமக்கு வரம்.
நாடக வரலாற்றில் அழியாத பெயருக்குரியவர்.நீண்ட ஆயுளுடன்
ஆரோக்கிய வாழ்வணைத்து வாழ
வாழ்த்துவோம் வாருங்கள்.வாழிய வாழியவே அண்ணா.உங்கள் அன்பில் நாம்.