(கீழ் கண்ட வாறு கூறிமகழ்கின்றார் ராஜேந்திரன் ) இன்று காலை எட்டு மணியளவில் அலைபேசி வழியாக ஒரு அழைப்பு வந்தது நான் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேசுகிறேன் உங்களை சந்தித்து பேச வேண்டும் எங்கே வரட்டும் என்றது அந்தக் கம்பீரக் குரல்
மிகப் பெரிய அளவில் தமிழ்த்தொண்டாற்றும் பெரியவர் நம்மை வந்து சந்திப்பதா என்று நானே நீங்கள் இருக்கும் இடம் வருகிறேன் அய்யா என்றேன் காலை 10 மணிக்கு எங்கள் சந்திப்பை தீர்மானித்தோம்
அய்யாவோடு எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வணக்கம் சொல்வது அவ்வள தான் இப்படியான நிலையில் அவர் என்னை சந்தித்து பேச வேண்டும் என்பது ஆச்சரியமாகவே இருந்தது
சரியாக பத்து மணிக்கு அவர் தங்கியிருந்த சித்ரா விடுதியில் சந்தித்தேன் சுமார் இரண்டு மணி நேரம் உரையாடினோம் அய்யாவின் தமிழ்ப்பணி தமிழுக்கான போராட்டங்கள் என பல்வேறு விடயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்
இப்படியான பொதுத் தளத்தில் இயங்கும் போது பாராட்டுக்கள் கிடைப்பதோடு சில விமர்சளங்களையும் சந்திக்க வேண்டும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் மனம் தளர்ந்து விடக் கூடாது என்று எனக்கு அறிவுரைகள் வழங்கியதோடு சர்வதேச அளவில் நான் செய்து வரும் தமிழ் பணிகளை அவதானித்து வருவதாகவும் அதற்கான பாராட்டுக்களையும் தெரிவிதார்
நான் இந்தளவு தமிழ்ப் பணியாற்ற எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான் என்று தன்னுடைய தமிழ்ப்பணியின் வளர்ச்சி பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்
அய்யாவோடு உரையாடலை முடித்து கிளம்பும்போது அவர் எழுதிய விடிந்தால் விடுதலை , மனைவிக்கு என்ற இரண்டு நூல்களையும் .தமிழ்ப்பணி இதழையும் வழங்கினார்
நாங்கள் உரையாடலைமுடிக்கும் நேரத்தில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் ஜவகர் ஆறுமுகம் அய்யா வை சந்திக்க வந்தார் அவர்தான் புகைப்படங்களையும் எடுத்துக் கொடுத்தார்
நான் தமிழன் என்று பெருமைப்படும் அளவில் தமிழ்த் தொண்டாற்றும் ஆளுமைகள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பெருமித்தோடு அய்யாவிடமிருந்து விடைபெற்றேன்