ஈருளியாயிரு.



யார் உன்னை
மிதிச்சாலும்
ஈருளியாயிருந்து
முன்னேறிக்கொண்டேயிரு..
வாழ்வில்
கற்றுக் கொண்டேயிரு.
ஆனாலும் அன்பையும்
மதிப்பையும் நிம்மதியையும்
இழந்து கொண்டிருப்பதும்
கற்றலுக்குள்ளடங்கும்.
வாய் தவறி
விழும் பேச்சும்
கைதவறி
எழுதும் எழுத்தும்
உடைந்த கண்ணாடியை
விடவும் கூர்மை.
யாரிடம்
பேசுகின்றோம்
என்பதை விட
என்ன பேசுகின்றோம்
என்ன எழுதுகின்றோம்
என்பதில் தெளிவாயிரு.
மாடு சிறப்பாக
வண்டிலை இழுத்தாலும்
சாட்டையால் அடி
வாங்காமலில்லை.
எத்தனை சிறந்த
மனிதனாக இருந்தாலும்
உனக்கும் அடி விழும்.
வாழ்த்தி பேசுவது
முடியாவிட்டாலும்
தாழ்த்தி பேசுவதை தவிர்.
வாழ்க்கையில் உயரலாம்.
உன் மதிப்பு
உன்னை மட்டும் சார்ந்ததல்ல
உன்னை சார்ந்த
இடத்தையும் சார்ந்தது.
உயர்த்து உயரலாம்.

ஆக்கம் கவிஞர் தாயாநிதி