யேர்மனியில் இயங்கி வரும் ஐரோப்பியத் தமிழ் (ETR)வானொலியின் 16வது ஆண்டு விழாவும் அகரம் சஞ்சிகையின் 10தாவது ஆண்டு விழாவும் நேற்றாகிய 15.02.20 அன்று டோட்மண்ட் நகரில் மண்டபம் நிறைந்த சபையோருடன் தேன் மதுரமாலை என்ற பெயரில் இவ்விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இவ்விழாவில் பல்கலை நிகழ்ச்சிகளான ஆடல் – பாடல் – வில்லிசை – பட்டிமன்றம் என்பன சிபோ சிவகுமாரின் தயாரிப்பிலும் இயக்கத்திலும்ஐரிஎன தொலைக்காட்சியின் அனுசரணையில் தயாரிக்கப்பட்டு நாளைய நாம் தொடர்நாடகத்தின் சில காட்சிகளும் இவ்விழாவில் இடம்பெற்றிருந்தன.
பல்வேறு நடன அமைப்புகளிலிருந்து வந்த நடன மாணவர்களின் நடனங்களும் தாளம் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் ஈழப்பிரியனால் தயாரிக்கப்பட்ட வில்லிசை நிகழ்ச்சியும் வெற்றிமணி ஆசிரியர் நடுவராக இருக்க சுவிசிலிருந்துருவருகைதந்த ஊடகவியலாளர் சண்.தவராசா எழுத்தாளர் பொலிகை யெயா – பாலா – சபேசன் – ஏலையா க.முருகதாசன் பல்கலைக்கழக மாணவர்களான செல்வி.கஸ்தூரி லோகநாதன்,செல்வன்.ராம் பரமானந்தன் ஆகியோர் பங்குபற்றிய புலம்பெயர் மண்ணில் முறைசார் ஊடகங்களின் பணி பயனுள்ளதா? பயனற்றதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றிருந்தது.
இவ்விழாவில் உரையாற்றிய ஐரோப்பிய தமிழ் வானொலியின் இயக்குனரும் அகரம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான த.இரவீந்திரன் அவர்கள் இவ்விழாவிலே யேர்மனியில் வெளிவரும் வெற்றிமணி அகரம் தமிழ் ரைம் ஆகிய அச்சு ஊடகங்களின் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து நிற்பது வேறு எங்குமே நடக்காதது எனக் குறிப்பிட்டதுடன் சபையோர் அனைவரும் பிரதம விருந்தினர்களே என விளித்துப் பேசுகையில் தான் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தடைகள் என்பவறறைக் கூறியதுடன் மக்களின் ஆதரவே இவ்விழாவைச் சிறப்பாக நடத்துவதற்குக் காரணம் எனக்குறிப்பிட்டு இவ்விழா
இவ்விழாவில் சிறப்பம்சமாக, விழாவை நடத்துவதே தாயக மக்களுக்கு என்று சொல்லப்படாமல் உதயம் தொண்டு நிறுவத்தினர் விரும்பினால் சபையோரிடம் நிதி அன்பளிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற முறைமைக்கமைய, அந்நிறுவன தொண்டர்கள் சபையோர் மனமுவந்தளித்த நிதியை பெற்று அகரம் சார்பாக தாயக மக்களுக்கு உதவி செய்தமையும் பாராட்டக்கூடியதே.
அத்துடன் இவ்விழாவில் சிற்றுரை ஆற்றிய வெற்றிமணி ஆசிரியர் அகரம் சஞ்சிகையின் வருகை தன்னை உசார்ப்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.
புலம்பெயர் நாடொன்றில் ஒரு வானொலியையோ அல்லது ஒரு சஞ்சிகையை அதுவும் யேர்மனியில் நடத்துவது என்பது அசாத்தியமானதாகும்.
இச்சூழ்நிலையில் பல நெருக்கடிக்களுக்னு மத்தியிலும் இருபெரும் ஊடகங்களை நடத்துவது என்பது பாராட்டப்பட வேண்டியதே.அகரதீபம் என்ற சஞ்சிகையும் மூன்று மாதத்திற்கொருமுறை இங்கிருந்துதான் வெளிவருகிறது எனபதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவினை தேவன் விஐயன் தர்மா சுதன் ஆகியோர் கம்பிரமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன் மூத்த அறிவிப்பாளரான திரு.லோ.வலன்ரைன் அவர்கள; பைலா பாட்டொன்றையும் பாடி சபையோரை மகிழ வைத்தார்.