தமிழுக்கு ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கை அமைத்து அதன் செம்மொழி அங்கீகாரத்தை உறுதி செய்து மேம்படுத்த தமிழ் ஆர்வலர்கள் முயன்று அதை முடித்துள்ளார்கள்.தற்போது ஐக்கிய ராஜ்யத்திலும் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்க முயற்சிகள் நடக்கின்றன,.இந்தவேளையில்
பண்டைய காலத்தில்
தமிழை வளர்த்து,ஆராய்ந்து அதற்காக தம்மை அர்ப்பணித்த பண்டைத் தமிழர்களெல்லோரும் எந்தவொரு அற்ப, சொற்ப எதிர்பார்ப்புகளும் அற்றவர்களாகவே இருந்தனர்.
சிவபெருமானையே எதிர்த்து நின்று “நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே|| என்று நக்கீரர் தமது தமிழறிவை பறைசாற்றியதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
இவை தவிர நாயன்மார்கள்.
இறைவனையன்றி வேறெவரையும் போற்றிப் பரவாது தெய்வீக உணர்வுடன் தமிழை வளர்த்திருந்தனர்.
கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார், திருப்புகழைத் தந்த அருணகிரிநாதர் மற்றும் ஆழ்வார்கள்,இராமாயணத்தை தமிழில் தந்த கம்பர் போன்றோர் தமிழை தெய்வீகத் தன்மையுடனேயே போற்றி வளர்த்திருந்தனர்.
இவை தவிர மனு நீதி கண்ட சோழன்,குலோத்துங்கசோழன், ராஜராஜசோழன் போன்றோர் எவ்வகையிலும் நெறி தவறாது மனு தர்மத்துக்கே இடந்தந்து சிறந்த தமிழரசர்களாக விளங்கினர்.
குறுநில மன்னரான பாரி, முல்லைக்கே தமது தேரைக் கொடுத்து தன்னுள் இருந்த மென்மையான உன்னத சுபாவத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
திருக்குறளைத் தந்த திருவள்ளுவர், ஒளவைப் பிராட்டியர் சரிதம் என்பன தமிழன் மகத்துவம் எத்துணை புராதனமானது என்பதைப் புலப்படுத்துகின்றன.
பத்தொன்பதாம்,இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் பெருமக்களாலும்,கவிஞர்களாலும் தமிழின் மகத்துவம் வெகுவாக சொல்லப்பட்டு இருக்கிறது. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் எங்கும் காணோம் என்றும் தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்திடல் வேண்டும் என்ற பாரதியின் கனவும் இன்று
பலிக்கிறது. உலகில் பல நாடுகளில் என்று தமிழ் வாழ்கிறது அல்லவா. இதை வாழவைக்க புலம் பெயர்ந்த தமிழர்களே உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை,உங்கள் தாய் மொழியை கற்றுக்கொடுக்க தவறாதீர்கள்.
கோவிலுர் செல்வராஐன்