திருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா 10/01/2021 அன்று திருச்சி செவனா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றதுவிஜிபி நிறுவன திருச்சிக்கினைத் தலைவர் இரா. தங்கையா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு திருச்சி லிம்ரா பேக்ஸ் நிறுவனர் எம்.சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். மணப்பாறை லட்சுமி மெட்ரிக் பள்ளித் தாளாலார் அரிமா சௌமா ராஜரத்தினம் , ரொட்டேரியன் வி.எஸ். . பாஸ்கரன் , கவிஞர் முருகபாரதி , கவிஞர் கவி செல்வா , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் திருச்சி பாட்சா பிரியாணி நிறுவனர் முகம்மது அபூபக்கர் சித்தீக் , புலவர் தியாகசாந்தன் கனடாவிலிருந்து Dr . நரேந்திரா விவேகானந்தா , ஜெர்மனியிலிருந்து நையினைவிஜயன், இலங்கையிலிருந்து கவிஞர் சுபாஷனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்இனிய நந்தவனம் நடத்திய சிறந்த சுய முன்னேற்ற நூல் பரிசுப் போட்டியில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுக்கு முதல் பரிசும் கவிஞர் மு.முருகேசுக்கு இரண்டாம் பரிசும் மயிலாடுதுறை இளைய பாரதிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது மூவருக்கும் நம்பிக்கை நாயகர் என்ற விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டதுதிருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் எழுதிய „மசிழ்ச்சி“ சிறுகதை நூலும் இனிய நந்தவனம் குழும வெளியீடான „தூண்டில் “ ஹைக்கூ இதழும் வெளியிடப்பட்டது விழாவின் முத்தாய்ப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாதனை மாணவர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது தமிழகம் மட்டுமல்லாமல் கனடா , ஜெர்மனி ,சுவிட்சகர்லாந்து , இலண்டன் , இலங்கை, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் விருது பெற்றனர் முன்னதாக இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க கவிஞர் பா.தென்றல் கவிஞர் மணிகண்டர் இருவரும் நிகழ்வை ஆழகாக தொகுத்து வழங்க முனைவர் வே.த.யோகநாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நிகழ்வில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்