தயவு செய்து திரும்பி வந்து விடாதே – இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது.
நாட்க்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை
தேடி விட்டேன் – அவன் பெயர் தனிமை
✍️
கடல் அமைதியாகவே இருந்து விட முடியாது
எப்போதாவது அலைகள் கரைகளை வந்தே சேரும்.
உண்மையான அன்பை புறக்கணிப்பவர்கள்
பிறிதெரு நாளில் அதற்க்காகவே ஏங்க நேரிடும்.
✍️
உண்மையான அன்பு வைப்பவர்கள் – எப் போதும்
எவரையும் ஏமாற்ற மாட்டார்கள்.
போலியான நேசத்தோடு பழகுபவர்கள் – ஒரு போதும்
யாரோடும் நிலையாய் இருக்க மாட்டார்கள்.
✍️
இப்போது அழுது கொண்டிருக்கையில் – ஆறுதல்
சொல்லவே ஆள் இல்லை என்கிற கவலை இல்லை
எப்போதுமே ஆறுதலாய் இருப்பேன் என்றவரே
அழ வைக்கிறாரே என்பது தான் வலிக்கிறது.
✍️
வெறுத்தவர்களை தேடி போகாதீர்கள் – அவர்கள் பெரும்பாலும் யாரையோ தேடித்தான் போயிருப்பார்கள்.
திரும்பி வந்தால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் அவர்கள் எப்போதாவது விலகி போக கூடியவர்களே…
✍️
ஒரு முடிவெடுப்பதற்க்காக கொஞ்சம் விட்டு கொடுங்கள் – ஆனால் ஏற்கனவே முடிவெடுத்தவர்களிடம் ஒரு போதும் இறங்கி போகாதீர்கள்.
✍️
மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லி
சிரிக்க வைக்கத் தெரிந்த என்னாலே …!
சோகத்தை வெளியே காட்டவும் தெரியவில்லை
உள்ளே அழாமல் இருக்கவும் முடியவில்லை..
✍️
கூடவே இருக்கும் போது கொஞ்சமும்
உங்களை புரியாதவர்கள் என்றால் …!
அவர்கள் விலகி போனதற்கான
விளக்கத்தை கேட்க்காதீர்கள்.
✍️
விலகி போகிறவர்களுக்கு தண்டனை கொடுக்காதீர்கள் தயவு செய்து புன்னகையை கொடுத்து வழி அனுப்புங்கள்.
கண்ணீர் விடும் சந்தர்ப்பம் வரும் போது அவர்களுக்கு நம் சிரிப்பு மட்டுமே நிறையவே நினைவுக்கு வரும்.
✍️
நீங்கள் யாரோடு அதிகமாய்
பேசி பழுகுகிறீர்களோ ..?
அவர்கள் அதை விட இன்னும் அதிகமாய்
உங்களை பேசி பழக வைத்து விடுவார்கள்
தனிமையோடு.!
நெடுந்தீவு முகிலன்