கனடாவில் கோணேஸ்
இசையால் வளர்ந்து ஒலிபரப்பில் முதிர்ந்த உயிர்ப்பான கலைஞன் கனடாவில் கோணேஸ் பற்றி திரு.எஸ்.திருச்செல்வம் அவர்கள்
திரு.s.திருசெல்வம் (முரசொலி பத்திரிகை இலங்கை-பத்திரிகை ஆசிரியர்-முன்னை நாள் அரசியல் ஆய்வாளர்,அரசியல் விமர்சகர் மூத்த ஊடகவியலாளர் கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்
முதல் எழுத்தைக் கூறாமலும் முழுப் பெயரைச் சொல்லாமலும் ஷகோணே~; என்ற பெயரால் நன்கு அறிமுகமானவர் இவர். இந்த மூன்றெழுத்து இசையூலகிலும் ஊடகப் பரப்பிலும் ஆழமாக வேர் பதித்து விழுதெறிந்து கல்மேல் எழுத்தாகப் பதிவூ பெற்றுள்ளது என்பது மிகையான கூற்றன்று. நண்பர் கோணே~pன் ஐம்பதாண்டுப் பணியின் பின்னரைக் காலத்துக்கு வருமுன்னர் முன்னரைக் காலத்தை நோக்குவது முக்கியமானது. வளரப் போகும் நற்பயிரை முளையில் காட்டிய காலமது.தென்தமிழீழத்தின் தென்றல் வீசும் மட்டுநகரில் தமிழ்ப் பேரறிஞர் சுவாமி விபுலாநந்தரின் மாணவரான பீதாம்பரம் – பொற்கொடிநாயகி தம்பதிகள் இவரது பெற்றௌர். சாவகச்சேரி கோணே~pன் பிறந்தகம். தாய்மொழியிலும் தமிழிசையிலும் தந்தைக்கிருந்த அளவற்ற பற்று றிபேர்க் கல்லூரியில் கல்வி கற்கையிலேயே ஆசிரியர் வினாசித்தம்பியிடம் கர்நாடக இசையைக் கற்க வைத்தது. பருவம் பதினாறாக இருக்கையில் இளைஞர் கோணே~pன் மனசு இசையின்பால் முழுமையாக ஈர்க்கப்பட்டது. தமது சகோதரர் பரமேசுடன் இணைந்து ஏழு பெர் கொண்ட இசைக் குழுவொன்றை தாயகத்தின் தலைநகரமும் பாடல் பெற்ற தலமுமான திருகோணமலையில் உருவாக்கினர்.
வெறுமனே சினிமாப் பாடல்களை மட்டும் மேடைகளில் வழங்குவதை விரும்பாது மண்ணையூம் மக்களையூம் முன்னிறுத்தி புதுப்புதுப் பாடல்களை புதிய மெட்டுக்களில் வழங்க ஆரம்பித்தார். ஷஷயாழ்பாடி யாழ்ப்பாணம் nஎயர் கொண்டது|| என்ற புகழ் பெற்ற பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவ்வணியில் சேரும் பல பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கினார். இது 1968ம் ஆண்டு நிகழ்வூ என்பதை மனதில் இருத்தினால் இளைஞர் கோணே~pடம் பிளைந்த தேசிய உணர்வைத் தெரிந்து கொள்ளலாம். பதினேழு வயதாக (1969) இருக்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தினகரன் விழாவில் இவரது குழு வழங்கிய இசை நிகழ்ச்சி பல்லாயிரம் மக்களின் வரவேற்பைப் பெற்றது. அவ்வேளை ஈழத்துத் தமிழ் நாடக உலகின் தந்தை என மதிக்கப்பெற்ற கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் இவரது குழுவூக்கு ஷஈழத்து மெல்லிசை மன்னர்| என்று பட்டம் வழங்கி மதிப்புடன் கூடிய அங்கீகாரத்தை வழங்கினார்.
1972ம் ஆண்டில் கொழும்பில் சிலோன் ஸ்ரூடியோவில் பகுதிநேரப் பணியாளராக இருந்து கொண்டு வூhந சுழலயட ளுஉhழழட ழக ஆரளiஉ இல் சேர்ந்து இசைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இதன் தொடர்ச்சியாக அமைந்ததே 23 இசைக்கலைஞர்களை மேல்நாட்டு வாத்தியக் கருவிகளோட சேர்த்து முழநௌh ழுசஉhநளவசய என்ற பெயரில் உருவாக்கிய நவீன இசைக்குழு. இதன் பின்னர் கோணே~; அவர்கள் இசைத்துறையையே முழுநேரத் தொழிலாக ஏற்று மேடைகளையூம் இலங்கை வானொலியையூம் தம்வயப்படுத்த ஆரம்பித்தார்.
கொழும்பில் சரகவி ஸ்ரூடியோவில் ஒலிப்பதிவூ செய்யப்பட்டு ஐந்து பாடல்களோடு வெளியான இவரது இசைத்தட்டே இலங்கையில் வெளியான முதலாவது தமிழிசைத் தட்டாகும். இவ்வேளையில் இளைஞர் கோணே~; சில சோதனைகளையூம் சந்திக்க நேர்ந்தது. இசைத்தட்டின் சில பாடல்களை ஒலிபரப்புச் செய்ய இலங்கை வானொலி நிலையம் மறுத்தது. தமிழ் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பியதை அடுத்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் மலேசியா இந்தியா சிங்கப்பூர் நாட்டு வானொலிகளும் இப்பாடல்களை ஒலிபரப்புச் செய்தன. ஷஷஉனக்குத் தெரியூமா?|| என்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற பாடல் இந்த இசைத்தட்டில் ஒன்றாகும். 1975இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவராகி 250க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்ததுடன் ஆயிரத்துக்கும் அதிகமான மேடை நிகழ்ச்சிகளையூம் வழங்கினார். 1983ல் இனஅழிப்பு மற்றவர்களைப்போல கோணேi~யூம் புலம்பெயர வைத்தது. ஜேர்மனிக்குச் சென்ற அவர் அங்கு தமிழர் புனர்வாழ்வூக்காக பல எழுச்சிப் பாடல்களையூம் எழுதி மெட்டமைத்து தமது மனைவி குழந்தைகளையூம் சேர்த்து அரங்கேற்றினார். அத்துடன் அங்கு தமிழ் ஆங்கிலம். பரதநாட்டியம் சங்கீதம் மற்றும் வாத்தியக் கருவிகளைக் கற்பிக்கவென ஒரு தமிழ்க்கல்லூரியை ஆரம்பித்து ஞாயிறு தோறும் அதனை நடத்தி வந்தார்.
மூன்று வருட ஆய்வின் பின்னர் சங்கீத முறைமையைத் தழுவி மேல்நாட்டு இசை வழியில் சர்வதேச சங்கீத சுரத்தட்டு என்னும் இசைப்பயிற்சி நூலை எழுதி வெளியிட்டது இவரின் மிகப் பெரும் சாதனை. சென்னை இசைக் கல்லூரியில் இந்நூல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது இவருக்குக் கிடைத்த வெற்றி மட்டுமன்றி ஈழத்தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரும் புகழாகம்.
மேற்கு ஜேர்மனியில் 1985ஆம் ஆண்டு கம்பியூ+ட்டர் இசையை ஒலிப்பதிவிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தியதன் மூலம் தமிழில் முதன்முறையாக கணினி வழியாக இசையைப் பயன்படுத்தியவர் என்ற பெருமையூம் இவருக்கே உரியது. ஜேர்மனியில் சுமார் இருபதுக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமான நிறைவேற்றிய இவர் 1990 மார்ச் மாதம் தமது குடும்பத்தோடு கனடாவில் நிரந்தரக் குடிவரவாளராக குடியேறினார். இவரது கனடிய வருகை இம்மண்ணில் தமிழிசைக்கு ஒரு புத்துணர்ச்சியையூம் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒரு புத வடிவத்தையூம் வழங்கியது எனலாம்.
ஓர் இசைக்கலைஞராக தமிழுலகுக்கு நன்கு அறியப்பட்ட இவர் கனடாவில் ஒலிபரப்புத் துறையில் தனது பாதத்தைப் பதிக்க விரும்பினார். அதேசமயம் இருபத்துமூன்று இசைக்கலைஞர்களை இணைத்து முதன்முதலாக தமிழர்களின் இசைக்குழு ஒன்றையூம் இங்கு ஆரம்பித்தார். ரொறன்ரோவில் மட்டுமன்றி மொன்றியால் வன்கூவர் ஆகிய இடங்களிலும் இக்குழுவின் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தேறின. இலங்கையிலிருந்தும் இளங்கலைஞர் சிலர் இவர் குழுவில் வந்து இணைந்தது இவருக்குக் கிடைத்த பெருவெற்றி.
1990இல் வாரத்துக்கு 30 நிமிடங்கள் மட்டும் ஒலிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சியே ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. 1992லே திரு. ஞானேஸ்வரனுடைய அரைமணி நேர தமிழ் வானொலி நிகழ்ச்சி ஷதேமதுரம்| என்ற பெயரில் ஆரம்பமானது. அதனையடுத்து இளையபாரதியின் ஷசங்கமம்| அரைமணி நேர தமிழ் வானொலி நிகழ்ச்சியூம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைந்ததே கோணே~pன் ஷராகப்பிரவாகம்| என்னும் அரைமணி நேர வானொலி நிகழ்ச்சி.
மூன்று மக்கியமான தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் சில வார வித்தியாசங்களில் ஆரம்பமாகி ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியையூம் வரவேற்பையூம் ஏற்படுத்தி தமிழ் ஆர்வத்தை உருவாக்கின. ஆனால் அரைமணி நேர நிகழ்ச்சிகள் என்பதாலும் அவைகளை எடுத்துச் சென்ற அலைவரிசைகள் தௌpவற்றதாக இருந்ததாலும் கோணே~; திருப்தியடையவில்லை. இதன் காரணமாக 1993ம் ஆண்டு 530 யூஆ அலைவரிசையில் வாரத்தில் ஏழு நாட்களும் இரவூ எட்ட மணிமுதல் பத்து மணிவரை ஷரேடியோ ஏ~pயா| என்ற புது நிகழ்ச்சியை ஆரம்பித்து செய்திகளோட நாடகம் இசை ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் இவரது நிகழ்ச்சிகான மக்கள் ஆதரவூ அதிகரிக்கத் தொடங்கியது. இன்றுபோல மின்னஞ்சல் வசதிகளோ ஸ்கைப் வசதிகளோ செய்தி இணையத்தளங்களோ இல்லாத அந்தக் காலத்தில் ஏழு நாட்களும் ஒலிபரப்புச் சேவை நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. இவரது மகன் பிரதீப் கோணே~pன் முயற்சியால் பிற்பகுதியில் ஷரேடியோ ஏ~pயா|வின் இருபத்திநான்கு மணிநேர தமிழ்ச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பாவிலும் இச்சேவை வியாபிக்கப்பட்டதால் அங்கு ஒலிபரப்பான முதலாவது இருபத்திநான்கு மணிநேர தமிழ் வானொலிச் சேவை என்ற சிறப்பிடம் இதற்குக் கிடைத்தது. ஆனால் இந்த முயற்சி தொடராமற் போயிற்று. அதேபோன்று ஒலிபரப்புத்துறையில் கூடிய நேரத்தை ஒதுக்க நேர்ந்ததால் இசைக்குழுவின் செயற்பாடுகளும் முடக்க நிலைக்குச் சென்றது. வானொலி ஒலிபரப்பில் கோணே~; அதிக நேரத்தைச் செலவிட்டு அதற்கான ஒரு ஒலிக்கூடத்தையூம் சொந்தமாக நிறுவி அந்தக் கலையகத்திலிருந்தே 1994ம் ஆண்டிலிருந்து நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தார். பொருளாதார ரீதியில் இவர்கள் எதிர்பார்த்தது வெற்றியளிக்கவில்லை. இதனால் ஒலிபரப்பின் வழமையான செயற்பாடுகளில் அவ்வப்போது தடங்கல்கள் ஏற்பட்டன. இருப்பினும் செய்தி வழங்கலிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக இலங்கையிலிருந்து பிரபல்யமான தமிழ் கலைஞர்களை கனடா அழைத்து வந்து மேடை நிகழ்ச்சிகளோடு வானொலியூ+டாகவூம் பல சிறப்பம்சங்களை வழங்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை வானொலிக் கலைஞர்கள் கே.எஸ்.பாலசந்திரன் வரணியூ+ரான் எஸ்.எஸ்.கோணேசபிள்ளை ஏஇஎம்.சி. ஜெயசோதி ஆகியோரை இங்கு வரவழைத்து ஒரே மண்டபத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ரேடியோ ஏ~pயா நிகழ்த்தியது. தாயக கலைஞர்கள் கலைநிகழ்ச்சிக்காக கனடாவூக்கு அழைக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்ததோடுஇ நுழைவூச் சீட்டின்றி நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் திரும்ப நேர்ந்ததும் மறக்க முடியாதது.
அதேசமயம் ரோயோ ஏ~pயாவின் அலைவரிசை ஊHஐN ரேடியோவூக்கு மாற்றப்பட்டது. நிதி நெருக்கடி தௌpவற்ற அலைவரிசை என்பன தொடர்சேவையை மட்டுப்படுத்தியதுடன் நேயர்கள் மத்தியிலும் கசப்பான உணர்வூகளை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியை ஒரு மாற்றத்தினூடாக திருத்திக் கொள்ள விரும்பிய கோணே~pற்கு 1998ம் ஆண்டில் மொன்றியலில் 24 மணிநேர தமிழ் வானொலிச்சேவையை ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐவூடீஊ என்ற பெயரில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேளையில் தான் 2001ம் ஆண்டு தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை ஒன்றை நடத்துவதற்கான அனுமதியையூம் இவர் பெற்றார்.
16இ000 சதரு அடி கொண்ட ஒரு கட்டிடத்தை ஒலிஃஒளிபரப்புக்கு ஏற்றதாகப் புதுப்பித்து வேலை ஆரம்பிக்கப்பட்டது. பலரது உதவி பல்வேறு வழிகளிலும் இதற்குக் கிடைத்தது. எனினும் பொருளாதாரச் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இதனால் தொலைக்காட்சிச் சேவை நிகழ்ச்சியை தனியார் ஒருவருக்கு விற்க வேண்டிய நிலை கோணே~pற்கு உருவானது எதிர்பாராதது. அந்தத் தொலைக்காட்சிச் சேவை வூயூஆஐடு ழுNநு என்ற பெயரில் இப்பொழுது நடைபெறுவதாக கோணே~; தெரிவிக்கின்றார். இருப்பினும் கனடிய மண்ணில் முதலாவது 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பித்த சாதனையாளர் என்ற பெயரும் கோணே~pற்கே கிடைத்தது. 2014ம் ஆண்டு மொன்றியல் குஆ அலைவரிசையில் தமிழ் வானொலிச் சேவையை நடத்துவதற்கான அனுமதிய கோணே~; ஊசுவூஊயிடமிருந்து பெற்றார். 2015 ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நாற்பது வருடகால கோணே~pன் கலை வாழ்க்கையில் உற்ற துணையாக இருந்து வரும் அவரது மனைவி பத்மினியூம் பிள்ளைகள் பிரதீப் கோணே~; ராதிகா கோணே~; ஆகியோரும் தமிழ் மக்களால் நன்றிகூறப்பட வேண்டியவர்கள்.
கோணே~; அவர்களின் இருபத்தைந்து ஆண்டு கால இசைக்கலைப் பணியை வியந்து 1993ம் ஆண்டில் கனடா ஷதமிழர் தகவல்| அதன் இரண்டாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருதுடன் தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவம் செய்தது. இவ்வேளையில் நினைவூ கூறப்பட வேண்டியது.
இறுதியாக ஒரு விடயத்தை இங்கு கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். அமைதியான சுபாவமும் ஆர்வத்துடனான விடாமுயற்சியூம் கொண்ட கோணே~; பல சந்தர்ப்பங்களில் ஷஅகலக் கால் வைத்ததால்| எடுத்த கருமங்களைச் சரியாக முடித்து வைக்க முடியாத நெருக்கடிகளைச் சந்தித்தார் என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய என் போன்றவர்களால் உரிமையோடு கூற முடியூம்.
அவரது ஆற்றலுக்கும் அக்கறைக்கும் அற்றுப்போகாத அபூர்வ சிந்தனைகளுக்கும் இணைவாக வசதியூம் வளமும் அமைந்திருப்பின் அவரால் நிலையான மேலும் பல சாதனைகளை புகுந்த மண்ணில் நிலைநாட்டியிருக்க முடியூம். அதற்காக காலம் இன்னும் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இசையில் வளர்ந்துஇ ஒலிபரப்பில் முதரிந்த உயிர்ப்பான கலைஞன் கோணே~; நீண்டு வாழ்ந்து நெடிதுயர்ந்த சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள்!