கடந்த 04.01.2020 ( சனிக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் நகரத்தில் நடைபெற்ற „ஈழக்குயில் 2020 “ பிரமாண்ட ஐரோப்பிய தாயகப்பாடல் போட்டி யேர்மனியில் நிகழ்வு நடைபெற்றிருந்தாலும் 06 நாடுகளில் இருந்து போட்டியாளர் பங்குபற்றியமை யேர்மன் நாட்டுக்கே சிறப்பு. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக „சுரலய “ இசைப்பள்ளி அதிபர் இரா. செங்கதிர் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தது.
பி.ப 1மணியளவில் மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம், பொதுச்சுடரேற்றல், வரவேற்புரை தொடர போட்டிகள் பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மேற்ப்பிரிவு, மத்தியபிரிவு என மேடையை போட்டி போட்ட வண்ணம் அமைந்தது. போட்டியின் நடுவர்களாக.திருமதி விஜயலட்சுமி போசராஜசர்மா ( சங்கீத கலாவித்தகர்,சங்கீத ஆசிரியர்) திரு.K.s.பாலச்சந்திரன் ( மெல்லிசை பாடகர்) திருவாளர் சண்முகலிங்கம் தேவகுருபரன் ( தபேலா இசைக்கலைஞர்) திரு.சிறீ பாஸ்கரன் (யேர்மன் சாரங்கா இசைக்குழு சுரத்தட்டுக்கலைஞர்) திரு.இரா.சேகர்(இசையமைப்பாளர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். அத்தனை போட்டி பாடல்களுக்கும் சுரலய இசைக்குழு இளம் கலைஞர்களே சிறப்பாக இசை வழங்கியமை சிறப்பே. 250 ற்கு மேற்ப்பட்ட மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் பி.ப 1மணி தொடக்கம் இரவு 1 மணி வரை நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தது.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் போட்டியில் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதி சிறந்த பாடகருக்கு „ஈழக்குயில் 2020 „விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டமை சிறப்பே. நிகழ்வின் அறிவிப்பாளராக பிரான்ஸ் கிருஷ்ணா மற்றும் அருள்மொழித்தேவன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.