ஈழ சினிமப்பரப்புக்குள் என் நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் படைப்பாளிகளில் ஒருவரான K.S. Vinoth இன் ஆழிக்கிளிஞ்சில் திரைப்படத்தின் சுவர்ப்படம் நேற்று வெளியாகியிருந்தது.எமது திரைத்துறையை பல வருடங்களாக நேசிப்பதுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவராக வினோத் எனக்கு எப்போதும் நெருக்கமானவர்.அவரையும் அவர் படைப்புக்களையும் எனக்கு பிடிக்கும் அதனால் காத்துக் கொண்டிருக்கின்றேன்.அவர் நெருக்கமானவர் பிடிக்கும் என்பதற்காக ஒரு விடயத்தைக் கூறாமலும் கடக்க முடியவில்லை. தென்னிந்தியாவில் பின்பற்றும் இந்தக் கலாச்சாரம் ஈழத்தில் உருவாகுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது யாதெனில் ஒரு நடிகரின் படமாக ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதாகும்.ஒரு படம் தயாரிப்பாளருடையதாகவோ அல்லது இயக்குனருடையதாகவோ தான் இருக்குமே தவிர நடிகருடையதல்ல…ஆரம்பத்தில் இந்த நடிகரும் இப்படைப்புக்குள் உள்ளார் என்பதைக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த முறையானது இன்று அவருடைய படம் என்பதாகவே மாறிவிட்டது.இக்கருத்து வினோத்துக்கோ அவர் படைப்புக்கோ எதிராகப் போடப்பட்டதல்ல… ஈழத்தில் இப்படி ஒரு கலாச்சாரம் உருவாகுவதில் உடன்பாடில்லாத என் தனிப்பட்ட கருத்தாகும்.இங்குள்ள இயக்குனர்கள் தம்மை நிருபிக்கும் வரை இது தான் நிலமை பணம் கொடுத்தவரும் பணத்தை பெற்றுத்தந்தவரும் ஆட்டும் கைப் பொம்மைகளாகவே இருக்க வேண்டும்
மது சுதா