அத்தனை அவலங்கள் மத்தியிலும்
இத்தனை அவசரங்கள் மத்தியிலும்
பெத்த பிள்ளைகளை காக்கவும்
சொத்து பத்துகளை சேர்க்கவும்
எத்தனையோ சிரமங்கள் பட்டு
நித்திரையிழந்து நின்மதியிழந்து
முத்தானவாழ்வின் இளமையிழந்து
பித்தர்கள்போல் பிற தேசங்களிலே
நித்தம் பணிகளுக்கு பறந்தோடி
சத்துணவின்றி கண்டத்தையுண்டு
சித்தர்கள் போல வாழும் எம்மவர்.
இத்தனை நாள்கண்ட இடர்மறந்து
அத்தனை பேரும் கூடிமகிழ்ந்து ,
சத்தமாக பாடியாடி கொண்டாடிவே
நத்தார் பண்டிகை வருகிறதோ.
உத்தமமான இந்நாளிலே நாம்
மொத்தக்கவலைகளையும் மறந்து
மித்திர பந்துக்களோடு களித்து
பெத்தவர்களை பேணி மகிழ்வித்து
புத்திரர்களுக்கு பரிசுகள் கொடுத்து
புத்தாடையணிந்து புனிதமாகி
நத்தாரை நல்வழியில் களிப்போம்.
புத்தாண்டை எதிர்நோக்கி நிற்கும் ,முக
புத்தக அன்புள்ளங்கள் அனைவருக்கும்
நத்தார்தின நல்வாழ்த்துக்களும் ,இனிய
புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.
மகிழ் நேசன்.