ஆமைகள்.


இயலாமை
முயலாமையின்
பங்காளி.
அறியாமை
கல்லாமையின்
பிரசவம்.
உயராமை
உழைப்பின்மையின்
அறுவடை.
உணராமை
உறுத்தலின்மையின்
குணம்.
விடியாமை
விழிப்பின்மையின்
வெளிப்பாடு.
துடியாமை
இனத்தில்
பற்றின்மை..
மதியாமை
மதியின்மையின்
செயல்.
பணியாமை
பண்பின்மையின்
வெளிப்பாடு.
போதாமை
தன்னிறைவின்மையின்
குறைபாடு.
ஆற்றாமை
களை.
பொறாமையை
விரட்டு.
மாற்ற
முடிந்ததை
மாற்று.
ஏற்புடையதை
ஏற்று
மகிழ்ந்திரு.

ஆக்கம் கவிஞர் தயாநிதி