12.08.2022. இன்றைய தினம்…
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில். ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள். நூல் வெளியீடு மிகச் சிறப்பாக நடந்தது அதாவது „சிந்திக்கும் சிந்தனைகள்“ மனித வாழ்வின் சிந்தனைகள் என ஒரு நூலினை சிறப்பாக தந்து எமது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஆசிரியர் திரு.அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் தற்போது நெதர்லாந்து தேசத்தில் வாழ்ந்தாலும் எங்கள் மண்ணையும் மக்களையும் மறவாது இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் திரு துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களை பாராட்டி வாழ்த்த வேண்டும் இன்று எமது மண்ணில் சிந்தனையால் சிதைந்து போயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இந்த நூல் ஒரு அருவருந்தாகும். கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு சிறப்பான நூலாக நாம் இந்த நூலை பார்க்கின்றோம். நூல் வெளியீட்டு நிகழ்வை தலைமையேற்று நடத்தி உள்ளார் மதிப்பார்ந்த திரு ஒட்டி சுட்டான் மகாவித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்… இந்த நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சுவையாளர்கள், மதகுருமார்,மாணவர்கள், என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள் எம்மையும் அழைத்து கௌரவம் தந்தமைக்கு நன்றி…..