என் மனதில் எனோ? ஒரு உருவம் ,
எண்ணமதில் உதித்து மறைகிறது.
மின்னலாய் தோன்றும் எழிலை
வண்ணமாய் வரைந்தெடுத்தேன்.
கன்னங்கள் குழிவிழு ,கண்கவர
புன்னகைக்கும் பேரழகியே உனக்கு
மென்கரிக்கோலால் உயிரளித்தேனடி.
கன்னமதை மெல்ல வருடுகையில்
என்கைக்கு எதையோ உணர்த்துகிறாயே?
பெண்ணவளே உன் சங்குக்கழுத்துக்கு
பொன் நகையிட்டு பூரிக்கிறேன் பொறு.
பொன்னோவியமே உனைக்கண்டதும்
என்னில் ஏதோ மாற்றம் கண்டேனடி.
பெண்மயிலொன்று கூந்தல் விரித்து
வெண்காகிதத்தில் ஏறியாடுவது போல
தென்படுகிறதே என்கண்களுக்கு.
உன்னழகைக்கண்டதும் ஓவியனின்று
பண்பாடும் கவியாகிப் பாடுகிறேனே .
உன்னாலே உண்டான உன்னத மாற்றமது.
உன்னைக்கண்டு பொறாமை கொண்டு
என்னவளும் சிலவேளை சீறுவாளோ ?
என் மீது சந்தேகித்து சாத்துவாளோ ?
சின்னவளே உன் சிங்காரம் கண்டு
மண்டலமே மருண்டு நிற்கையில் .
பெண்,அவள் மட்டும் விதிவிலக்கோ.
உன்னெழிலுக்க்காய் எதையுமே
என்னிதயம் தாங்குமடி
என்னோவியமே.
ஓவிய நேசன்