இரணைமடு தாயவளின் புகழ் பாடும் எனது வரிகள் உறவுகளே! எழுதும் எமக்கு ஏனே கானமாக்க வாய்ப்பை தரவில்லை தாயே!
விரைவில் தருவாய் தாயே கனகாம்பிகையே!
(பல்லவி)
ஆகாயம் பூத்தூவும் அழகான
இரணைமடு…
அம்பிகை நீயாளும் நிறைவான கருணைமடு…
நம்பிக்கை நாம் கொண்டோம்
பெருமளவு −எங்கள்
தும்பிக்கை நாயகனின் தாயழகு…
பச்சை வயல் சூழ்ந்த பதித்தாயே – உம்மை
சுற்றி வணங்கிட சுமை நீங்குதே…
நித்தம் கூடும் உன் அருளாலே – எங்கள்
சுற்றம் எங்கும் சுகம் கூடுதே…
(ஆகாயம் பூத்தூவும்…)
சரணம் (1)
திங்களின் அழகே! ஆரமுதே! −எங்கள்
திரிபுர சுந்தரன் பேரழகே!
இரணை மடுவாக ஓடி வந்தோம் அம்மா!
கருணை முகம் கண்டு பாடி நின்றோம்.
தங்கரதம் ஏறி தரணியை நீ ஆள,
மங்கலம் கூடுதே மனைகளெல்லாம்..
.
அன்புக்கரம் நீட்டி அணைத்தாய் எமை நீயே,
ஓங்கார பொருளான நாயகியே!
நெஞ்சம் முழுதும் உந்தன் ஆட்சியம்மா!
வஞ்சம் தீர்த்து வைக்கும் மாரியம்மா!
(ஆகாயம் பூத்தூவும் அழகான… )
சரணம் -2
அழைத்திடும் முன்பே அருள்வாயே −இந்த
அகிலம் எங்குமே நிறைந்தாயே!
நிலைக்கும் செல்வம் நீ ஆனாய் −தாயே!
நின்மதி கொடுக்கும் உன் பதியே தாயே!
பொற்பதம் நாம் நாடி போற்றினோம் உனைப்பாடி
கனகாம்பிகையே அம்பிகையே…
வித்தகம் நிறைத்தாயே விண்ணென வளர்ந்தாயே,
உள்மனம் உருகுதே உன்னிடமே…
அன்பே உருவாக அமர்ந்தவளே!
இரணை மடுவின் பதியாளும் மன்னவளே!
(ஆகாயம் பூத்தூவும் அழகான… )
−தே.பிரியன்−
புகைப்படம்-தே.பிரியன்