அன்புள்ள அப்பா.


சத்தியத்தின்
எல்லைக்குள்ளே
சுத்தி சுத்தி
வாழ்ந்தாரு..
சங்கடங்கள்
இல்லாமலே
சந்தோஷமாய்
வாழ்ந்தாரு..
சொந்தக்
காலில் நின்றிடவே
ஒற்றைக் காலில்
நின்றாரு
சொந்தமாக
தோட்டம் செய்து
வென்றாரு..
பந்தக்
கால் எனக்கு
நடும் வரையில்
பக்கம் நின்று
பாது காத்தாரு.
கை பிடித்து
நான் கடல் கடக்க
கண்ணீர் கரை
உடைக்க கதறிக்
கதறி அழுதாரு.
கண்ட
நாள் வரையில்
கைகளில்
தழும்பும்
கால்களில்
பித்த வெடிப்பும்
கவனமின்றி
கடந்தாரு..
வேதனையை
காட்டாமலே
வேடிக்கை மனிதனாய்
வாழ்வியலை
வென்றாரு..
சாதனைகளால்
நான் உயர
சோதனைகளில்
மிதந்தாரு.
இன்னாரின்
பிள்ளையென
பேர் சொல்ல
வளர்த்தாரு
ஆனாலும் ஊருக்குள்ளே
அவர் இடத்தை
அவரே தக்க
வைத்தாரு.
கட்டிலில்
அப்பா படுத்ததை
நான் பார்த்ததில்லை
தொட்டிலும்
வீட்டில் இருந்ததில்லை
அப்பா தன்
தோழ்களையே
தொட்டிலாக்கி
ஆட்டுவாரு.
அப்பா
மார்போடும்
மனதோடும்
தாங்கி தாலாட்டினாரு
மருந்து வாங்கி
குடிச்சதை நான்
பார்த்ததில்லை.
மதுவுக்கு
அடிமையாக
இருந்ததில்லை.
பொதுப்படையாய்
சாதுவான
மனிதரானாரு.
சாமியை
நான் பார்ததில்லை
கோவிலுக்கும்
நான் போறதில்லை.
ஆனாலும்
சாமியோடு பேசி
வாழ்ந்துமுள்ளேன்
அவரே என்
அப்பா ஐயனாரு
சாமி என்பேன்..
பேசப்படாத
தெய்வம் உலகில்
அப்பாக்களே
இவர்களை
போற்றாத நாங்கள்
மனித பிறப்புகளேயில்லை.
தனக்காக
வாழாத கடவுளரை
வணங்குவோம்..

ஆக்கம் கவிஞர் தயாநிதி