அந்திவான அழகைக் கண்டேன்
அத்திப்பழ நிறத்தைப்பார்த்தேன்
ஆடைகட்டிய மேகமொன்று
மேடைபோட்டு ஆடக் கண்டேன்…
மெல்லாடை காற்றினிலாட
மோகனத்தில் ராகம் படித்தேன்
மஞ்சள் வெயில் முத்தத்தில்
மரகதமாய் ஒளிரும் மரம் கண்டேன்
மரத்தின் மேலே ஒரு கூட்டில்
மகிழ்ந்து பேசும் சிட்டுக்களின்
கொஞ்சிப் பேசும் மொழியில்
கொஞ்சம் கொஞ்சமாய் எனை மறந்தேன்..
மலர்கரம் தொட்டு அருகே வந்தாய்
மலர்களாயிரம் மலரக்கண்டேன்
மயக்கம் பாதி தயக்கம் பாதி
மொழிக்கு ஏது இங்கு வேலி -உன்
விழிகளில் வீழ்ந்த நானொரு கைதி…
ரதிமோகன்