***அடிமைச் சங்கிலிகள் ***

அடைபட்டு கிடப்பதேனோ?
ஆண்களின் ஆதீக்கத்துக்கும்
அதிகார வெறிக்கும் வீணே
அடங்கிப் போவதேனோ? பெண்ணே,
*
தடை போடும் அந்த பழமை
தாற்பரியங்களை நீயும்
தளர்த்திவிடு அல்லது, முற்றாய்
தகர்த்தெறிந்து விடு ,கண்ணே
*
மடை திறந்த வெள்ளம் போல்
மனதில்பிறக்கும் அசைகள் நீயும்,
முளையிலேயே கிள்ளி எறிந்து
மூலையிலமர்ந்து அழுவதேனோ? மானே
*
குடையாக உனை காக்கத
குடும்ப உறவுகளுக்காக நீயும்
குறிகிய வட்டத்துக்குள் உன்னை
குனிந்த கோளையாக்கிவிடாதே- தேனே
*
வடை நரிக்கதை கேட்டு அன்று
வஞ்சகம் தந்திரம் பயின்றவளே,
வையத்தில் நீயும் சிறப்புற
வாழ்ந்திட துணிந்து எழுந்திடு -முன்னே
*
உடைத்து எறிந்து விடு, நீயும்
உன்மேல் இறுக்கியிருக்கும் அந்த
உணர்வுகளற்ற ஆணாதீக்கரிட்ட
உருவமற்ற அடிமைச் சங்கிலி -தன்னை
*
விலங்கு நேசன்